கோவையில் மழை காலங்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கைகள் தீவிரம்.!!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக் காலங்களில் மழைநீர் சாலையில் தேங்காமல் வடிவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக் காலங்களில் மழைநீர் சாலையில் தேங்காமல் வடிவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக கள்ளிமடை அருகே சங்கனூர் பிரதான கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றி கால்வாயிலுள்ள செடி, கொடிகளைத் தூர்வாரி மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன.

அதே போல் கோவை மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கால்வாய்களிலும் தேங்கியுள்ள குப்பைகளை முழுவதுமாக அகற்றி தடையின்றி மழைநீர் செல்ல தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மழைநீர் தங்குதடையின்றி செல்ல ஜே.சி.பி.இயந்திரங்கள் உதவியுடன் அனைத்து கால்வாய்களிலும் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. கழிவு நீர் கால்வாய் அடைப்புகள் சூப்பர் சக்கர் வாகனம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மேம்பாலங்கள் கீழ் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. போதுமான அளவு மோட்டார்களும் உள்ளன,’’ என்றார்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...