திருப்பூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் நல்லூர் பகுதியில் உள்ள அருள்மிகு வலம்புரி ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நாளைய தினம் கோவில் ஆண்டு விழா நடைபெற உள்ள சூழ்நிலையில் நேற்று நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்த பெண் ஒருவர் கோவில் உண்டியலை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக அளித்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைக் கொண்டு திருப்பூர் நல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கோவிலில் இது போன்ற கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாகக் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.