குப்பைகளை தரம் பிரித்து கொடுக்காத நபர்கள் மீது அபராதம் விதிக்க அந்தந்த பகுதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள், உணவு விடுதிகள், விடுதிகள் போன்றவற்றில் குப்பைகளை நீல மற்றும் பச்சை நிற பக்கெட்டுகள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் சுமார் 5500 தெருக்கள் உள்ளன. கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் உள்ள வீடுகளில் 250 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம் நியமிக்கப்பட்டு 1200 பேர் வரை சிறிய ரக வாகனம் மூலம் வீடு, வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பையை சேகரித்து வருகின்றனர்.
ஆனால், வீடுகளில் உள்ளவர்கள் தெருக்களில் உள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகளை கொட்டும் போது மக்கம், மக்காத குப்பை என அனைத்தையும் சேர்த்து கொட்டிவிடுகின்றனர். இதுதவிர, காய்கறி, பழங்கள் விற்பனை நிலையங்கள், மார்க்கெட்டுகள், கடைகள், சாலையோர கடைகள், தனியார் நிறுவனங்கள் என பலவற்றிலிருந்தும் வெளியாகும் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் ஒருசேர கொட்டப்படுகிறது.
இதை தடுக்க, அனைத்து வகை கடைகள், விடுதிகள் உட்பட குப்பைகளை வெளியேற்றும் இடங்களில் மறுசுழற்சி செய்யும் குப்பையை சேகரிக்க நீல நிற பிளாஸ்டிக் பக்கெட்களும், மக்கும் குப்பையை சேகரிக்க பச்சை நிற பிளாஸ்டிக் பக்கெட்களும் வைக்க மாநகராட்சி சார்பாக கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த அறிவுறுத்தல் மூலம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பெற வசதியாக இருக்கும். இதனால் வெள்ளலூருக்கு கொண்டு செல்லப்படும் குப்பைகள் தரம் பிரித்து போய் சேரும். இதனால் குப்பைக்கிடங்கில் மீதேன் உருவாகி தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்படும். குப்பைகளை தரம் பிரித்து கொடுக்காத நபர்கள் மீது அபராதம் விதிக்க அந்தந்த பகுதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார்.