தாய்ப்பால் சேகரிப்பில் தமிழக அளவில் முன்னிலை வகிக்கும் கோவை அரசு மருத்துவமனை..!

கடந்த 2015ம் ஆண்டு முதல் கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கி தமிழக அளவில் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தாய்ப்பால் சேகரிப்பில் கோவை அரசு மருத்துவமனை தமிழக அளவில் முன்னிலையில் இருப்பதாக டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள், எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள், பிரசவம் ஆனவுடன் உடனடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்களின் குழந்தைகள் மற்றும் பல்வேறு காரணங்களால் தாய்ப்பால் தேவையுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கியில் பெற்று தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது.

இதற்காக அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தாய்ப்பால் தானம் பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கி தாய்ப்பால் சேகரிப்பில் தமிழக அளவில் முன்னிலையில் உள்ளதாக அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...