கோவையில் உள்ள அனைத்து மேம்பால தூண்களை அழகுற மாற்ற வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை.!!

சுங்கம் மேம்பாலத்தில் - வ.உ.சி, அப்துல் கலாம் படங்கள் ஒட்டப்பட்டுள்ளதால், அதேபோல், கோவையில் உள்ள அனைத்து மேம்பால தூண்களை அழகுற மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாநகரில் தற்போது காந்திபுரம் மேம்பாலம், அவினாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம் ஆகிய மேம்பாலங்கள் பயன்பாட்டிலிருந்து வருகிறது. தற்போது அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

கோவையில் பயன்பாட்டிலிருந்து வரும் மேம்பாலங்களின் தூண்களில் கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் போஸ்டர்கள் ஒட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் உருமாற்ற தடைச்சட்டம் 1959ன் படி அரசு அலுவலகங்கள், மேம்பாலங்கள், அரசுப்பேருந்துகள் ஆகியவற்றில் போஸ்டர்கள் ஒட்டவும், விளம்பரங்கள் செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளன என்ற போதும் போஸ்டர்கள் ஒட்டுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தற்போது திருச்சி சாலையில் சுங்கம் பகுதியில் கட்டுமானத்தில் உள்ள இரண்டு தூண்களில் அரசியல் கட்சியினர் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

இதனிடையே கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக வந்ததால், அவசர ஏற்பாடாக இரண்டு தூண்களிலிருந்து போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.



இருந்த போதும், தூண்கள் மோசமாகக் காட்சியளித்ததால், மாற்று யோசனையாக வ.உ.சிதம்பரனார் மற்றும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஆகியோரது உருவப்படங்களை பிளக்ஸ் ஸ்டிக்கராக அடித்து தூணின் மீது ஒட்டியுள்ளனர்.



அவசர யோசனையாக இருந்தால், சிறப்பான முறையில் இரு தலைவர்களது படங்களும் அமைந்துள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், மக்களும் சற்று நேரம் நின்று படங்களைப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள், இதே போல் கோவை மாநகரில் உள்ள அனைத்து தூண்களிலும் முக்கிய தலைவர்களின் படங்கள், கோவையின் அடையாளங்களைப் பறைசாற்றும் இடங்களின் புகைப்படங்களை ஒட்டினால் அழகாகவும் இருக்கும் அதே சமயம் தூண்களில் போஸ்டர்கள் ஒட்டுவதும் குறையும் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...