வால்பாறை அருகே பள்ளி வளாகத்தை இடித்துச் சேதப்படுத்திய காட்டு யானைகள்..! மக்கள் அச்சம்!

காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறை பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே காட்டு யானைகள் பள்ளி வளாகத்தை இடித்துச் சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, காட்டு யானைகள் இரவு நேரத்தில் வீடுகள் சத்துணவு மையம், மளிகை கடைகள், பள்ளி வளாகம் என்று உணவு தேடி, சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



இந்த நிலையில், வால்பாறை அருகே சேடல் டேம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் 8 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து, ஜன்னல் கதவை உடைத்து உள்ளிருந்த பொருட்களை சேதப்படுத்தியது.



மேலும், அருகில் இருந்த குழந்தைகள் காப்பகம் பகுதிக்குச் சென்று ஜன்னல் சுவரை உடைத்து உள்ளே இருந்த குழந்தைகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் முட்டை, அரிசி, சத்து மாவுகள் போன்றவற்றை எடுத்து சாப்பிட்டு சேதப்படுத்தியது.



இதையடுத்து, அருகிலிருந்த பொதுமக்கள் யானைகளை பந்தங்கள் மூலமாகவும் பட்டாசுகள் வெடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

மேலும், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறை பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...