கோவை போத்தனூர் பகுதியில் கோவை குண்டுவெடிப்பு கைதி இறந்தது குறித்து போலீசார் விசாரணை..!

இறந்த சேட் பக்ருதீன், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 47வது குற்றவாளியாகும். இவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.


கோவை: கோவை போத்தனூர் பகுதியில் கோவை குண்டுவெடிப்பு கைதி இறந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆத்துபாலம், குறிச்சி பிரிவு- போத்தனுார் பிரதான சாலையில் வசந்தம் நகரை சேர்ந்தவர் சுலைமான் (61). இவர் ஆடுகள் வளர்த்து வரும் நிலையில், அதில் ஒன்றை ஒருவர் திருடி, ஆட்டோவில் எடுத்துச் செல்வதை கண்டார்.

இதையடுத்து, சுலைமான் மற்றும் மகன்கள் முகமது, இப்ராஹிம் ஆகியோர் ஆட்டோவை துரத்திச் சென்றனர். சாரதா மில் ரோட்டில் இறைச்சி கடை நடத்தும் நூர்முகமது கடை முன் ஆட்டோ நிற்பதை கண்டனர்.

பின்னர், அங்கிருந்த பாரதி நகரை சேர்ந்த சேட் பக்ருதீன், நூர்முகமது ஆகியோரிடம், இவர்கள் கேள்வி எழுப்பியதும், நூர்முகமது ஆட்டை திரும்ப கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சுலைமான் அளித்த புகாரின் படி, போத்தனுார் போலீசார் நுார்முகமது கடைக்குச் சென்ற போது, சேட் பக்ருதீனை காணவில்லை. திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவை போலீசார் கைப்பற்றினர்.

இந்நிலையில், காலை 10.30 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில், நினைவிழந்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்த போது, அந்நபர், சேட் பக்ருதீன் என தெரிய வந்தது.

இந்த நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மனைவி ஜீனத் நிஷா, தனது கணவரை யாரோ தாக்கியதால் உயிரிழந்துவிட்டதாக போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சுலைமான் இறைச்சி கடை நடத்தும் நூர்முகமது ஆகியோரிடம் விசாரித்தனர். மேலும், தலைமறைவான முகமது, இப்ராஹிம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இறந்த சேட் பக்ருதீன், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 47வது குற்றவாளியாகும். இவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...