அரசு முறை பயணமாக கோவைக்கு வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையனை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
கோவை: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பைக் திருடன் ஒருவனை துரத்திப் பிடித்த சூலூர் காவல் ஆய்வாளர் மாதையனுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் சூலூர் பகுதியில் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
இதனையடுத்து, அவர்களில் ஒருவன் காவல் ஆய்வாளர் மாதையனை தட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தப்பி ஓடிய நபரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்று விரட்டி பிடித்து கைது செய்தார்.
இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையனுக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அரசு முறை பயணமாக கோவைக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையனை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
மேலும், சூலூர் காவல் ஆய்வாளர் மாதையனுக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில் சட்டம் - ஒழுங்குக்குச் சவால் விடும் குற்றவாளிகளின் கொட்டத்தை அடக்கி, பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்குரிய சூழலை உறுதி செய்வதே காவல்துறையின் முதன்மைப் பணியாகும். அத்தகைய பணியைத் திறம்படச் செய்யும் சீருடைப் பணியாளர்கள் மக்களின் உண்மை நாயகர்களாகி பெருமதிப்பினைப் பெறுகிறார்கள்.
கோவை சூலூர் காவல் நிலைய ஆய்வாளரான தாங்களும் தங்கள் காவல் நிலையத்தின் காவலர்களும் நீலாம்பூர் பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியை மேற்கொண்ட நிலையில், அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த சந்கேத்திற்கிடமான இரண்டு இளைஞர்களைத் தாங்கள் விசாரிக்கையில், சரியான பதில் சொல்ல முடியாத அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்றபோது, அவர்களைத் தடுக்க முயன்று சண்டையிட்டதில், தங்கள் சட்டை கிழிந்த நிலையிலும், ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அவர்களில் ஒருவரைத் தாங்களும் காவலர்களும் பிடித்திருக்கிறீர்கள்.
இதையடுத்து, அந்த நபரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மற்றொரு நபரையும் அடையாளம் கண்டு, இருவரையும் கைது செய்து, அவர்கள் வசமிருந்த திருட்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்திருக்கிறீர்கள். மக்கள் உழைத்துச் சம்பாதித்த மோட்டார் சைக்கிள்களைத் திட்டமிட்டுத் திருடி வந்த நபர்களை தாங்கள் உயிருக்கு அஞ்சாமல் போராடிச் சட்டத்தின் முன் நிறுத்தியதன் மூலம், மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறீர்கள்.
தங்களின் துணிச்சல் மிக்க செயல்பாடு காவல்துறையில் உள்ள நேர்மையான, துணிச்சலான அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என்று அந்த வாழ்த்து மடலில் குறிப்பிட்டுள்ளார்.