கோவையில் கிரிக்கெட் விளையாடிய போது புதுமாப்பிள்ளை மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு..!

இது குறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் கிரிக்கெட் விளையாடிய போது புதுமாப்பிள்ளை மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை ஆர்.எஸ்.புரம், காமராஜபுரம், 5- வது வீதியை சேர்ந்தவர் சூரியதினேஷ் (28). இவர் தனியார் வங்கிக்கு பணம் வசூலித்துக் கொடுக்கும் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.

இந்த நிலையில், சூரியதினேஷ், தனது தம்பி கவுதம்நவீன் (24) என்பவருடன் பச்சாபாளையம் அருகே ரங்காபுரம் விளையாட்டு மைதானத்துக்கு நேற்று முன்தினம் சென்றார்.

அங்கு அவர், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது சூரிய தினேசுக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு வாந்தி எடுத்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கவுதம்நவீன் மற்றும் நண்பர்கள், அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினர். இதனால் உடல்நிலை சீரானதாக தெரிகிறது. இதையடுத்து அவர் மீண்டும் விளையாட தொடங்கினார்.

அப்போது சூரியதினேஷ் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சூரியதினேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...