கோவையில் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யத் தொடங்கியது. வேலைக்குச் சென்று திரும்பியவர்கள் காந்திபுரம், 100 அடி சாலை, பகுதியில் மழை தண்ணீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் செல்வதால் வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் மிதந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோவை: கோவையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியதால், வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றவர்கள் அவதியடைந்துள்ளனர்.
கோவையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் புயல் கரையைக் கடந்ததைப் பொட்டி கோவை மழை இல்லாமல் வெயில் சுட்டெரித்தது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த அறிக்கையில் வங்கக்கடலில் மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. கோவையில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மாலை நேரத்தில் கோவையில் மழை வருவது போல மேகம் மூட்டமாகக் காணப்பட்டது.
சற்று நேரத்திற்கு முன்பு மழை பெய்யத் தொடங்கியது இதில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலையில் வழக்கம் போல் வேலைக்குச் சென்று திரும்பியவர்கள் கோவை காந்திபுரம், 100 அடி சாலை, பகுதியில் மழை தண்ணீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் செல்வதால் கார்கள், மோட்டார் சைக்கிள், செல்லக்கூடியவர்கள் மிதந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோவை காந்திபுரம், 100 அடி சாலை, காளப்பட்டி, விமான நிலையம், அவினாசி சாலை, ஆட்சியர் அலுவலகம், பெரியநாயக்கன்பாளையம், ரயில் நிலையம், அருகே உக்கடம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், சூலூர் பகுதியில் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.