பெரியாயிபாளையத்தை சேர்ந்த ராசாத்தி என்பவர் மகளிர் சுய உதவிக் குழுக்களில் பெற்ற கடன்களை திரும்ப செலுத்த முடியாததால் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் கணவனுடன் இணைந்து வாங்கிய சுய உதவிக் குழு கடனை கட்டமுடியாததால் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் திருமுருகன்பூண்டி, பெரியாயிபாளையத்தை சேர்ந்தவர் ராசாத்தி (35). இவரது கணவர் நல்லதம்பி (43). இவர்களுக்கு 12 வயதில் மகனும், 11 வயதில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில், இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் இணைந்து மகளிர் சுய உதவிக் குழு கடன் அதிகளவில் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடன் அதிகமானதால் நல்லதம்பி கடனை தன்னால் அடைக்க முடியாது, குழுவுக்கு பணமும் தர முடியாது என கூறிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ராசாத்தி வேலைக்குச் சென்று கடனை அடைக்க முடியாததால் கடன் கொடுத்த மகளிர் சுய உதவிக் குழுவினர் தன் வீட்டுக்கு வந்து பணத்தைக் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகவும், தன்னால் முழு கடனையும் அடைக்க முடியாது என்பதால் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்க வந்தவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

இதனைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அவரை தடுத்து காப்பாற்றினர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.