திருப்பூரில் கணவனுடன் இணைந்து வாங்கிய சுய உதவிக் குழு கடன் கட்டமுடியாததால் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி..!

பெரியாயிபாளையத்தை சேர்ந்த ராசாத்தி என்பவர் மகளிர் சுய உதவிக் குழுக்களில் பெற்ற கடன்களை திரும்ப செலுத்த முடியாததால் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் கணவனுடன் இணைந்து வாங்கிய சுய உதவிக் குழு கடனை கட்டமுடியாததால் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் திருமுருகன்பூண்டி, பெரியாயிபாளையத்தை சேர்ந்தவர் ராசாத்தி (35). இவரது கணவர் நல்லதம்பி (43). இவர்களுக்கு 12 வயதில் மகனும், 11 வயதில் மகளும் உள்ளனர்.

இந்நிலையில், இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் இணைந்து மகளிர் சுய உதவிக் குழு கடன் அதிகளவில் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடன் அதிகமானதால் நல்லதம்பி கடனை தன்னால் அடைக்க முடியாது, குழுவுக்கு பணமும் தர முடியாது என கூறிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ராசாத்தி வேலைக்குச் சென்று கடனை அடைக்க முடியாததால் கடன் கொடுத்த மகளிர் சுய உதவிக் குழுவினர் தன் வீட்டுக்கு வந்து பணத்தைக் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகவும், தன்னால் முழு கடனையும் அடைக்க முடியாது என்பதால் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்க வந்தவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.



இதனைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அவரை தடுத்து காப்பாற்றினர். இச்சம்பவத்தால் ஆட்சியர்‌ அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...