நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 26-ம் தேதி திருப்பூரில் முழு அடைப்பு செய்யவும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 26-ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் நூல் விலையானது 130 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது. கிலோ 220 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நூல் விலை தற்போது 350 ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது.
மேலும் முன்பதிவின் மூலம் காத்திருப்பின் அடிப்படையிலேயே நூல் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர் விலை உயர்வால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுப் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தையும் சந்தித்துள்ளனர்.
மூலப்பொருட்களான பருத்தி, நூல் ஏற்றுமதி மற்றும் பதுக்கல் காரணமாகச் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்துவதே நூல் விலை உயர்வுக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே நூல் விலை உயர்வைக் கண்டித்தும் மூலப்பொருட்களான பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த 116 அமைப்புக்கள் கலந்து கொண்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தில் 26ம் தேதி அன்று திருப்பூரில் முழு அடைப்பு செய்யவும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.