யானைகள் நடமாட்டத்தால் அச்சத்தில் உள்ள அப்பகுதியினர் வேட்டை தடுப்பு காவலர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை துடியலூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் இரவு நேரத்தில் உலா வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோவை புறநகர் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், துடியலூர் அருகே குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பழனிகவுண்டன்புதுார், ராமகிருஷ்ணா நகர், நேதாஜி நகர், கவுதம் நகர் பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலை, 3 மணிக்கு இரண்டு யானைகள் அப்பகுதியில் உலா வந்தன. அவை வீடுகளுக்கு முன் வளர்ந்திருந்த வாழைகள், தென்னங்கன்றுகளை பிடித்து இழுத்து சேதப்படுத்தின.
இதனால், அச்சத்தில் உள்ள அப்பகுதியினர் வேட்டை தடுப்பு காவலர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "காட்டுயானைகள் இங்குள்ள பள்ளத்தின் வழியாக வந்து மேட்டுப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. காட்டு யானைகளின் வரவை தடுக்க, வனத்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேட்டை தடுப்பு காவலர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்த வேண்டும்" என்று தெரிவித்தனர்.