கோவையில் ஆட்டை அடித்து இழுத்துச் சென்ற சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை..!

மேட்டுப்பாளையம் நெல்லித்துறையில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டைக் கொன்று அடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் நெல்லித்துறையில் தோட்டத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை இழுத்துச் சென்றதால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை கிராமம், இரண்டு பக்கம் வனப்பகுதியாலும், இரண்டு பக்கம் பவானி ஆற்று நீராலும் சூழப்பட்டுள்ளது.

இங்குள்ள விவசாயிகள் வாழை, தென்னை, பாக்கு ஆகிய பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். பலர் ஆடு, மாடுகள் வளர்ப்பதை உபதொழிலாக செய்து வருகின்றனர்.

தற்போது, நெல்லித்துறை விளாமரத்துார் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் ருக்குமணி என்பவரின் கன்றுக் குட்டியை, சிறுத்தை அடித்து கொன்று இழுத்துச் சென்றது. விவசாய தோட்டங்களில், வளர்க்கப்படும் நாய்களும் காணாமல் போயுள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில் ருக்மணி, தனது ஆட்டை, தோட்டத்து சாளையில் கட்டியிருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு பார்த்தபோது, ஆடு காணவில்லை. ஆனால், ஆடு கட்டப்பட்டிருந்த கயிறு, இரு துண்டுகளாக கிடந்தன.

மேலும், ஆட்டை சிறுத்தை இழுத்து சென்றதற்கான கால் தடையம் இருந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் சம்பவ இடத்திற்கு சென்று, சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணித்தனர்.

இது தொடா்பாக, நெல்லித்துறை விளாமரத்தூர் பகுதியினர் கூறுகையில்:-

சமீபகாலமாக இப்பகுதியில், சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. தோட்டத்தில் வளர்க்கப்படும் நாய்கள் காணாமல் போகின்றன. சிலர் சிறுத்தையை பார்த்துள்ளனர். இரவில் இப்பகுதியில் நடந்து செல்ல பயமாக உள்ளது. எனவே, இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...