நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்த உள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் வருகை தரும் முதலமைச்சரிடம் தொழில்துறையினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து திருப்பூர் தொழில் துறையினருடன் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில் துறை சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முதல்வரிடம் முன்வைக்க தொழில்துறையினர் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தற்போதைய நிலவரப்படி நூல் விலையானது 350 வரை உயர்ந்துள்ளதால் பின்னலாடை துறை ஆனது வீழ்ச்சியடைந்து வரும் சூழலில் இருப்பதால் உடனடியாக நூல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளனர்.
மேலும், திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனையை உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருப்பூரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தொழில் நகரமான திருப்பூரில் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருவதால் அவர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு இருப்பிடங்களை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் தொழில்துறையினர் முன்வைக்க உள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.