இன்று கோவைக்கு வருகை தந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கவுள்ளார். அதை தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்டுள்ள பிரம்மாண்ட மேடையில் வழங்கவுள்ளார்.
கோவை: இரண்டு நாள் பயணமாக கோவை வந்துள்ள முதல்வரை வரவேற்கும் விதமாக திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். மேளதாளங்கள் முழங்கஅவருக்கு கோவை விம்மன் நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் வ. உ.சி மைதானம் வரை உற்சாக வரவேற்பு அளித்தனர்.
குறிப்பாக, அவினாசி சாலையில் உள்ள நவ இந்தியா பகுதியில் கூடியிருந்த 100க்கும் மேற்பட்ட பீளமேடு பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தங்கள் வேலையை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை தமிழக முதல்வரிடம் அளித்தனர்.
முதல்வர் வருகையையொட்டி, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2000க்கும் மேற்ப்பட்ட போலீஸார் சாலை நெடுகிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.