கோவையில் முதல்வர் கலந்து கொள்ளும் அரசு விழாவில் பாஜக மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்வரிசையில் இருக்கை ஒதுக்கீடு.

தமிழக முதலமைச்சர் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் கோவை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் அரசு விழாவில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றவுள்ளார்.



கோவை: தமிழக முதலமைச்சர் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் கோவை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் அரசு விழாவில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றவுள்ளார்.

தொடர்ந்து, வ. உ.சி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேடையின் முன் வரிசையில் கோவை மாவட்டத்தில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி உட்பட 10 எம்.எல்.ஏ.,க்களுக்கு விழாவின் முன் வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், அந்த இருக்கைகள் காலியாக காட்சியளிக்கின்றன. அரசு சார்பாக விழா நடக்கும் போது, எதிர்கட்சிஎம்எல்ஏக்களுக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில், கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளுக்கு அப்போது இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக அரசின் ஜனநாயக நாகரீகமான செயல் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பாஜகவின் வானதி சீனிவாசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களா? இல்லை புறக்கணிப்பார்களா? என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும்.

Newsletter

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...