அழிவின் விளிம்பில் உள்ள நாட்டு இன காளை மாடுகளைக் காக்க வேண்டும் என்பதற்காக இன்று பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
பொள்ளாச்சி: நாட்டு இன மாடுகளை காக்க பொள்ளாச்சியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் என்றாலே விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் தான். இங்கு ஆண்டாண்டு காலமாக விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் பெரிதும் ஆர்வம் காட்டி வந்தனர்.
தற்போது கிராமம் அனைத்தும் நகரமயம் ஆகி வருவதோடு இளைஞர்கள் பலர் கிராமத்தை விட்டு வெளியூர்களுக்கு வேலைக்காகச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. மீண்டும் இளைஞர்கள் விவசாயிகளாகவும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும், அழிவின் விளிம்பில் உள்ள நாட்டு இன காளை மாடுகளைக் காக்க வேண்டும் என்பதற்காக இன்று பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

இந்த பந்தயத்தில் கோவை, திருப்பூர், என பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட காளைகளை பந்தயத்தில் உரிமையாளர்கள் களம் இறக்கினார்கள்.
இதில் இரண்டு, மூன்று என்ற பல் வரிசை கொண்ட வயது அடிப்படையில் காளைகள் போட்டியில் களம் கண்டது. போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் காளை மற்றும் அதன் உரிமையாளர்களுக்குக் கோப்பையும் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்றும், இந்த கால இளைஞர்கள் இடையே நாட்டு மாடு வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அதன் பெருமையையும் உணர்த்தும் வகையில் இந்த போட்டி நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.