தமிழக முதலமைச்சர் நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வருகை தருகின்றார். வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய பணிகளுக்கான அடிக்கல் நட்டுகின்றார்.
கோவை: தமிழக முதலமைச்சர் நாளை கோவை வருகை - வ உ சி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.
தமிழக முதலமைச்சர்நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வருகை தருகின்றார். அவருக்குக் கோவை விமான நிலையத்திலிருந்து, விழா நடைபெறும் வ.உ.சி மைதானம் வரை வழி நெடுங்கிலும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய பணிகளுக்கான அடிக்கல் நட்டுகின்றார். மேலும் முடிவுற்ற பணிகளைத் துவக்கி வைத்து விழாவில் பேரூரையாற்றுகின்றார். இதற்காகப் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாலையில் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதலமைச்சர், அன்று இரவு கோவையில் ஓய்வு எடுக்கின்றார்.
அடுத்த நாள் 23 ந்தேதி காலை 11 மணிக்கு கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்கின்றார். இதையடுத்து மதியம் விமானம் மூலம் சென்னை திரும்புகின்றார்.
முன்னதாக கோவை வ உ சி மைதானத்தில் நடைபெறும் விழாவின் பிரம்மாண்ட பந்தலை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, காவல்துறை கண்காணிப்பாளர் நாகசெல்வரத்தினம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், சிஆர். இராமச்சந்திரன், பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, டாக்டர். வரதராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.