முதலமைச்சர் நாளை கோவை வருகை: பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி.!

தமிழக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பான கோவை ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவை நேரு நகரில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை தர உள்ளார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பான கோவை ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவை நேரு நகரில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இதில், அமைச்சர் பேசுகையில்;- பொதுமக்களின் எண்ணங்களில் தமிழக முதலமைச்சர் கோவை வருகை தந்தார். மிகச்சிறப்பாக நடந்தது எனப் பெருமைப்படும் அளவில் இருக்கவேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு இன்றி பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்.

5 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட வேண்டும். காலை10-30 மணிக்கு முதல்வர் வருகைதர உள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வரவேற்பு அளிக்க வேண்டும். வ உ சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் முதலமைச்சர் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

பொதுமக்கள் மனமகிழ்ச்சியோடு சென்று நலத்திட்ட உதவிகள் பெற்றேன். என்று இருக்க வேண்டும். கடந்த காலங்களில் விடுபட்ட பணிகள் என்பதை விட, அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றாமல் இருந்தனர். இப்போது, தமிழக முதலமைச்சர் கோவை வளர்ச்சி பணிகளுக்கு புதிய திட்டங்களைத் துவக்கி வைக்கவும் உள்ளார் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், சிஆர்.இராமச்சந்திரன், பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, டாக்டர்.வரதராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...