தொழில்நுட்பம் பயின்ற மாணவர்களுக்கான வாய்ப்புகள் உலக அளவில் அதிகரித்துள்ளதாக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தலைமை ஆலோசகர் டாக்டர் சஞ்சீவ்குமார் வர்ஷ்னி தெரிவித்துள்ளார்.
கோவை: தொழில்நுட்பம் பயின்ற மாணவர்களுக்கான வாய்ப்புகள் உலக அளவில் அதிகரித்துள்ளதாக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தலைமை ஆலோசகர் டாக்டர் சஞ்சீவ்குமார் வர்ஷ்னி தெரிவித்துள்ளார்.
கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள எஸ்.என்.எஸ் கல்வி குழுமங்களின் சார்பில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் சார்பில் 2019-2020 மற்றும் 2020-2021 ம் ஆண்டில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற சுமார் 2346 மாணவ மாணவிகள் பட்டங்களை வழங்கும் பட்டமளிப்பு விழா கல்லூரியில் நடைபெற்றது.
இவ்விழாவில் எஸ்.என்.எஸ் கல்வி குழுமங்களின் தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன், தாளாளர் ராஜலட்சுமி மற்றும் இயக்குனர் நளின் விமல்குமார், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தலைமை ஆலோசகர் டாக்டர் சஞ்சீவ் குமார் வர்ஷ்னி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.

முன்னதாக மேடையில் உரையாற்றிய சஞ்சீவ் குமார் வர்ஷ்னி பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பயின்ற மாணவர்களுக்கு அவர்களின் திறமைகளுக்கேற்ப உலகளவில் வாய்ப்புகள் காத்திருப்பதாகவும், இந்தியர்கள் பலர் பல்வேறு நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் பணியாற்றி வருவதாகும் தெரிவித்தார்.
தற்பொழுது தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய சவாலாகப் பருவநிலை மாற்றம் இருந்து வருவதாகத் தெரிவித்தவர், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பயிலும் மாணவர்கள் இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு அதற்கான தீர்வுகளைக் காண முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தற்போது இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பங்கு அளப்பரியது என்றார். இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் சவால்களை எதிர்கொள்ளத் தொழில்நுட்பம் பயின்ற மாணவர்கள் கண்டுபிடிப்புகளும் உதவிக்கரமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.