கொரோனா, ஜிகா, டெங்கு கண்காணிப்பு எதிரொலி: கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் 80 சதவீதம் குறைவு..!

கொரோனா, டெங்கு, ஜிகா உள்ளிட்ட நோய் தொற்றுகளை கட்டுப்படுத்த அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை - கேரளா மாநில எல்லைகளில் கொரோனா, ஜிகா, டெங்கு வைரஸ் நோய் தொற்றுகள் தொடர்பாக கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளதால், கோவை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது 80 சதவீதம் குறைந்துள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை - கேரளா எல்லைப்பகுதியில் உள்ள வாளையாறு சோதனை சாவடி உள்ளிட்ட 13 சோதனை சாவடிகள் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்தது.

இதனிடையே, கொரோனா, டெங்கு, ஜிகா உள்ளிட்ட நோய் தொற்றுகளை கட்டுப்படுத்த அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக ரேசன் அரிசி கடத்தல் 80 சதவீதம் குறைந்து உள்ளது. ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் கடத்துகின்றனர். இதனை உடனுக்குடன் கண்டறிந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...