போலீசார் விசாரணையில் அவர்கள் மதுக்கரை மார்க்கெட் சேர்ந்த ஹரிஹரன் (24), அஜித்குமார் (24) மற்றும் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் (24) என்பது தெரியவந்தது.
கோவை: கோவை மதுக்கரை அருகே வழிப்பறி கொள்ளையர்களை பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்த முதியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை மதுக்கரையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (64) தொழிலாளி. இவர் நேற்று மரப்பாலம் மலைச்சாமி கோயில் அருகே வந்தார்.
அப்போது, அங்கு நின்றிருந்த 2 வாலிபர்கள் திடீரென அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் பாலசுப்ரமணியனிடம் மிரட்டி பணம் தருமாறு கூறினார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
பின்னர், உடனே அந்த வாலிபர்கள் அவரின் பாக்கெட்டில் இருந்து பணத்தை பறித்தனர். அப்போது, பாலசுப்ரமணியம் சத்தம் போட்டார். அவரது சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்த கொள்ளையர்கள் தப்பிச் செல்ல முயற்சி செய்தனர்.
இதையடுத்து, உடனடியாக பாலசுப்ரமணியம் பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்கள் 3 பேரையும் மடக்கிப் பிடித்தார். பின்னர் அவர்களை மதுக்கரை போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில் அவர்கள் மதுக்கரை மார்க்கெட் சேர்ந்த ஹரிஹரன் (24), அஜித்குமார் (24) மற்றும் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் (24) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.