கோவை மதுக்கரை அருகே அவுட்டுகாய் வெடித்து நாய் பரிதாபமாக பலி..!

மதுக்கரை பகுதியில் அவுட்டுக்காய் வீசி செல்லும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கோவை மதுக்கரை அருகே அவுட்டு்காய் வெடித்து சம்பவ இடத்திலேயே நாய் பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை மதுக்கரை அருகே உள்ள பாலு கார்டன் பகுதியில் யாரோ மர்ம நபர் அவுட்டுக்காயை வீசி சென்றுள்ளார். நேற்று அந்த வழியாக சென்ற நாய் அவுட்டுக்காயை கடித்தது.

இதனையடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறியது. இதில் நாய் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தலை சிதறி இறந்தது. இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-

கடந்த வாரம் இதே போல் யாரோ மர்ம நபர் அவுட்டுக்காயை இந்த பகுதியில் வீசி சென்றனர். அப்போது, அந்த வழியாக சென்ற கார் அதன் மீது ஏறியது. உடனே அவுட்டுக்காய் வெடித்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவர்களுக்கு எதுவும் ஏற்படவில்லை. எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அவுட்டுக்காய் வீசி செல்லும் நபர்களை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...