எச்.ஐ.வி, இரத்ததானம் மற்றும் காசநோய் வழங்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதற்கான போட்டிகள் கோவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளுடன் நடத்தப்பட்டது.
கோவை: கோவை மாவட்டத்தில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமும் இணைந்து, 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி 'புதிய இந்தியா' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாட்டில் அதிக அளவில் எச்.ஐ.வி எய்ட்ஸ் பரவல் வாய்ப்புள்ள மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் கோவை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அவர்களின் அனுமதி பெற்று, 9வது மற்றும் 11வது வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் 3ம் கட்டமாக எச்.ஐ.வி. / எய்ட்ஸ், காசநோய் மற்றும் இரத்ததானம் வழங்குதல் குறித்தான விழிப்புணர்வினை இளைய சமுதாயத்திற்கு ஏற்படுத்திட முதற்கட்டமான கோவை துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜவீதி மற்றும் புனித மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் (தலா 50) மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்து எச்.ஐ.வி / எய்ட்ஸ், இரத்ததானம் மற்றும் காசநோய் வழங்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதற்கான போட்டிகள் கோவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளுடன் நடத்தப்பட்டது.

மேலும், போட்டிக்கான பரிசுத் தொகை மேற்கண்ட மூன்று போட்டிகளுக்கும் தனித்தனியாக முதல் பரிசு ரூ. 3000 / - இரண்டாம் பரிசு ரூ. 2000 / - மூன்றாம் பரிசு ரூ.1000 / - என அறிவிக்கப்பட்டு17.11.2021 அன்று எச்.ஐ.வி / எய்ட்ஸ் ஓவியப்போட்டியும், 18.11.2021 அன்று இரத்ததானம் குறித்தான விழிப்புணர்வு ஓவியப்போட்டியும் மற்றும் 19.11.2021 அன்று காசநோய் குறித்தான விழிப்புணர்வு ஓவியப்போட்டியும் மாணவ மாணவியர்களிடையே நடத்தப்பட்டுள்ளது.

மேற்படி, போட்டிகள் குறித்தான நிகழ்வுகளை கண்காணிக்க மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் குழு உறுப்பினர்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது கண்காணிப்பில் நடத்தப்பட்டது.
மேலும், ஒத்துழைப்பினை நல்கிய பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.