பொள்ளாச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் எல்இடி டிவி கொள்ளை..!

புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் எல்இடி டிவி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள டி.கோட்டாம்பட்டி ராஜராஜேஸ்வரி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (48). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.

கடந்த 15ம் தேதி தனது உறவினர் ஒருவரின் இறப்பிற்காக வெளியூர் சென்று உள்ளார். சீனிவாசன் நேற்று இரவு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகை மற்றும் வீட்டிலிருந்த எல்இடி டிவி கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, சீனிவாசன் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கொள்ளை குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...