ஊத்துக்குளி மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி.!!

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள டிஎம்எப் சுரங்க நடை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள டிஎம்எப் சுரங்க நடை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 5-மணி நேரத்திற்கும் மேலாக இடங்களில் இடி மின்னனுடன் கூடிய கன மழை பெய்தது. இதன் காரணமாகத் திருப்பூர் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சாலைகளில் ஆறாக ஓடியது.

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அங்கேரிப்பாளையம், மும்மூர்த்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

இதனிடையே, திருப்பூர் ஊத்துக்குளி சாலை டிஎம்எப் சுரங்க மேம்பாலத்தின் கீழ் கனமழை காரணமாகஇடுப்பு அளவிற்குத் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனிடையே, மாநகராட்சி அதிகாரிகள் இன்று சுரங்கப் பாலத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, கழிவுநீர் வாகனம் மூலம் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றினர். இதன் பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...