நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு 1001-பரிசு என டுவிட் செய்த அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு.!!

நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு 1001 பரிசு என ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு 1001 பரிசு என ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 7.11.2021-ம் தேதி அன்று இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி தேவர் ஐயா அவர்களை இழிவுபடுத்தியதற்காக அவரை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு ரூபாய் 1001 வழங்கப்படும் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

மேற்படி பதிவானது அமைதி, மீறுதலை தூண்டும் உட்கருத்துடன் குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது.

எனவே இது தொடர்பாக இன்று 17.11.2021- ஆம் தேதி பெரியகடைவீதி காவல்நிலைய குற்ற எண் - 633 /2021, U/s 504, 506 (I) படி அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...