வேளாண்மை கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய கட்டிடங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.‌


சென்னை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய கட்டிடங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ திருச்சி தர்மலிங்கம்‌ வேளாண்மை கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ கட்டப்பட்டுள்ள முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான மையம்‌, புதுக்கோட்டை வம்பன்‌ தேசிய பயறு ஆராய்ச்சி நிலையத்தில்‌ கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகங்களுடன்‌ கூடிய நிர்வாக கட்டிடம்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ படிப்பு மையம்‌, கன்னியாகுமரி மாவட்டம்‌ பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில்‌ கட்டப்பட்டுள்ள மாணவியர்‌ படிப்பு மையம்‌, விரிவுரை அரங்கம்‌ மற்றும்‌ தேர்வு அறை ஆகிய கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ 16.11.2021 அன்று காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்‌.

இந்நிகழ்வில்‌, தமிழ்நாடு வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.கே.பன்னீர்செல்வம்‌‌, வேளாளர்‌ உற்பத்தி ஆணையர்‌ மற்றும்‌ வேளாண்மை - உழவர்‌ நலத்துறை செயலாளர்‌ சி. சமயமூர்த்தி இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...