கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்திற்கு திறந்துவிடப்பட்ட பி.ஏ.பி தண்ணீர் நிறுத்தம் - விவசாயிகள் ஏமாற்றம்..!

கோதவாடி குளம் நிறையும் வரை பி.ஏ.பி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்திற்கு திறந்துவிடப்பட்ட பி.ஏ.பி தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் கோதவாடி குளம் உள்ளது. இந்த குளத்தை கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு, தன்னார்வலர்கள், விவசாயிகள் பங்களிப்புடன் கரைகள் பலப்படுத்தப்பட்டு, நீர்வழிப் பாதைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது பெய்த மழையால் கோதவாடி குளத்திற்கு தண்ணீர் வராததால், கோதவாடி குளத்திற்கு பிஏபி தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, கடந்த 10 நாட்களுக்கு முன்பு செட்டிக்காபாளையம் மற்றும் வடசித்தூர் கிளை கால்வாய் வழியாக பி.ஏ.பி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகள் கோதவாடி குளம் நிரம்பி விடும் என காத்திருந்தனர்.

ஆனால், பொதுப்பணித்துறையினர் திடீரென பி.ஏ.பி வாய்க்காலில் இருந்து வந்த கோதவாடி குளத்திற்கு வந்த தண்ணீரை நிறுத்தியதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

எனவே, குளம் நிறையும் வரை பி.ஏ.பி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...