கோவை கிணத்துக்கடவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை எம்.எல்.ஏ., தாமோதரன் ஆய்வு..!

விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை எம்.எல்.ஏ., தாமோதரன் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிதிலமடைந்து கிடந்த ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையத்தை இடித்து கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 1.75 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது இந்த கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.



இந்த நிலையில், இன்று இரண்டு மாடியுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின்போது கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தலைவர் நாகராணி, கிணத்துக்கடவு அதிமுக நகர செயலாளர் மூர்த்தி, மனோகரன், சிங் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...