கோவையில் பழுதான சாலைகளை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்..!

பழுதான தண்ணீர்ப் பந்தல், விளாங்குறிச்சி மற்றும் கொடிசியா பகுதிகளில் சாலைகளை சீரமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் பழுதான தண்ணீர்ப் பந்தல், விளாங்குறிச்சி மற்றும் கொடிசியா சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சி 37வது வட்டத்தில் உள்ள பிரதான சாலைகள், உட்புற சாலைகள் அனைத்தும் பழுதடைந்துள்ளது. இங்கு புதிய சாலைகள் அமைத்துத்தர வேண்டும். இதேபோன்று இப்பகுதியில் 6 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது.

குறிப்பாக, மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களில் மூன்று டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்கிற பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த மூன்று கடைகளையாவது அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள எஸ் பெண்ட் ரவுண்டானாவை சரி செய்ய வேண்டும். வினோஜிபா நகர் ரேசன் கடையில் குடும்ப அட்டையின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருக்கிற நிலை உள்ளது. ஆகவே இக்கடையை இரண்டாகப் பிரித்து புதிய ரேசன் கடை ஒன்றை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இது குறித்து அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வந்தனர். மேலும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் மக்கள் சபை நிகழ்வில் மனுகொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து, மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என மார்க்சிஸ்ட் கட்சியின் 37வது வட்டத்தின் கிளைகள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.



இதன் தொடர்ச்சியாக, இன்று கோவை தண்ணீர்ப் பந்தல் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன் தலைமை தாங்கினார்.



இதில் பீளமேடு நகர செயலாளர் கே.பாண்டியன், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிமணி மற்றும் கோவிந்தராஜ், சுமதி, ஜோதிபாசு, மணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.



முன்னதாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...