கோவையில் தொடரும் ஆன்லைன் மோசடிகள்..! குறுஞ்செய்தி அனுப்பி ரூ.20 ஆயிரம் திருட்டு - சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!

பான் கார்டை பதிவேற்றம் செய்ய இல்லை என்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று வந்த குறுஞ்செய்தியை நம்பி லிங்க்கை அழுத்தியவுடன் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் மாயமானது.


கோவை: கோவையில் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி பான் கார்டை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் இல்லை என்றால் உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பான் கார்டை பதிவேற்றம் செய்தவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 20 ஆயிரம் அபேஸ் செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம். பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (38). இவரது கைப்பேசிக்குக் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், நீங்கள் உங்களது பான்கார்டை பதிவேற்றம் செய்யவில்லை என்றால், வங்கிக் கணக்கு முடக்கப்படும் என பதிவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, உடனே அவர் அந்த லிங்க்கை அழுத்த, அடுத்த நொடியே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் மாயமானது.

இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மோசடி நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...