கோவை மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்த வழக்கில் கைதான பள்ளி முதல்வர் ஜாமின் கோரி மனு தாக்கல்..!

கைதான பள்ளி முதல்வரை ஜாமினில் விடுவிக்கக் கோரி கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்த வழக்கில் கைதான பள்ளி முதல்வர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவி, கடந்த 12ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்த போது, அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (35) பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை 'போக்சோ' பிரிவில் போலீசார் கைது செய்து, உடுமலை கிளை சிறையில் அடைத்தனர்.

ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக, பள்ளி முதல்வரிடம் மாணவி பல முறை புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மினி ஜாக்சன் (எ) மீரா ஜாக்சனை (46) கைது செய்யக்கோரி, மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பள்ளி முதல்வரை ஜாமினில் விடுவிக்க கோரி கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கைதான ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தியை 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க மகளிர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...