கோவையில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை..! குழந்தைகள் ஆணையம் விசாரணை நடத்த திட்டம்!

தமிழ்நாடு குழந்தைகள் ஆணைய தலைவர் சரஸ்வதி, ஆணைய உறுப்பினர்கள் கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு விசாரணைக்காக நாளை வருகை தருகின்றனர்.


கோவை: கோவையில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த வழக்கில் குழந்தைகள் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.

கோவையில் கடந்த 11ம் தேதி மாலையில் உக்கடம் பகுதியில் வசித்து வந்த பிளஸ் டூ மாணவி பொன் தாரணி பள்ளி ஆசிரியரின் தொடர் பாலியல் தொந்தரவால், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து, 12ம் தேதி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பெங்களூருவில் பதுங்கியிருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், தமிழ்நாடு குழந்தைகள் ஆணைய தலைவர் சரஸ்வதி, ஆணைய உறுப்பினர்கள் கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு விசாரணைக்காக நாளை வருகை தருகின்றனர்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணைய சட்டப்படி (CPCR Act, 2005) தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்துக்கு குழந்தைகள் தொடர்பானவை குறித்து ஆய்வு செய்யவும் கண்காணிக்கவும் விசாரணை செய்ய அதிகாரம் தந்துள்ளனர்.

சிவில் நீதிமன்றத்தைப் போல அழைப்பாணை (summon) அனுப்பி விசாரணை வாக்குமூலத்தை பதிவு செய்து ஆவணங்களை கேட்டுப் பெற்று இவற்றை ஆராய்ந்து விசாரணை முடிவுகளை ஆணையம் மேற்கொள்கிறது.

போக்ஸோ (section 44 of pocso Act, 2012) சட்டப்படி குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்த வழக்குகளையும் கண்காணிக்கும் அதிகாரம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்துக்கு தந்துள்ளனர்.

அதன்படி, கோவையில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த வழக்கில் குழந்தைகள் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...