கோவை மாநகராட்சியுடன் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் இணைந்து ஷ்வச்சதா செயலி நிறுவும் விழா கொண்டாட்டம்


கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் கோவை மாநகராட்சியுடன் இணைந்து ஸ்வச்சதா செயலியினை கைபேசியில் நிறுவும் விழா மற்றும் அதுகுறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும வளாகத்தில் நடைபெற்றது.

இதில், ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் விஎல்பி கல்லூரிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும், இதில், ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 10 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்வச்சதா செயலி மற்றும் ஸ்வச்பாரத் குறித்தான விழிப்புணர்வினை பொதுமக்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் ஏற்படுத்தும் வகையில் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.



இதைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாணவர்களின் தூய்மை இந்தியா மீதான பங்களிப்பினை பாராட்டினார்.



இந்நிகழ்ச்சியில், ஆர்ஏஏசி தன்னார்வ அமைப்பினர், ஆர்க் பவுண்டேஷன் ஸ்வச் வுமன் வொன்டர் மற்றும் ஸ்வச்பாரத் வாட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



முன்னதாக, இதேப்போன்ற ஸ்வச்சதா செயலி மற்றும் ஸ்வச் பாரத் விழிப்புணர்வு நிகழ்ச்சி பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...