கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பாரம்பரிய செண்டை மேளத்துடன் மாலை அணிந்து விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்..!

இதனால் துளசி மணி மாலை, கருப்பு வேட்டி, துண்டு உள்ளிட்ட பொருட்களின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது.


கோவை: கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பாரம்பரிய செண்டை மேளத்துடன் ஐயப்ப பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் மாலை போட்டு வருகின்றனர்.

கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் விரதம் துவங்க இருக்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் 1ம் தேதி துவங்கி மண்டல பூஜைகள் நடக்கும். தொடர்ந்து தை ஒன்றாம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும்.



தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, ஐயப்பனை சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கார்த்திகை முதல் நாளான இன்று கோவையில் உள்ள ஐயப்பன் கோவில்களில் குருசாமிகள் முன்னிலையில் மாலை அணிந்து வருகின்றனர்.



இதற்கான துளசி மணி மாலை, கருப்பு வேட்டி, துண்டு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நேற்று சூடு பிடித்திருந்தது. இன்று அதிகாலை முதல் ஐயப்பன் கோவில் அல்லது விநாயகர் கோவில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கி உள்ளனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...