கோவையில் மழையால் பாதித்த தக்காளி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!

மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு மழை கால நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக தக்காளிகள் அழுகியதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி மற்றும் பந்தல் வகை காய்கறிகள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர வாழை மற்றும் நெல்லும் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. பல மாவட்டம் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கூட பாதிக்கப்பட்டது.

அதே போல் கோவை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக தக்காளி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை பெய்த போது பலத்த காத்து வீசியது. அதில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை சாய்ந்துள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு மழை கால நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...