திருப்பூரில் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் அடிப்படை வசதிகள் செய்தி தரக்கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு..!

மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது மண்டல பகுதியில் சாலை, தெருவிளக்கு உட்பட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாததால் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே அனுப்பர்பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்தி தரக்கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது மண்டலம் அனுப்பர்பாளையம், பாலன் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இதனிடையே, இப்பகுதியில் சாலை, தெருவிளக்கு உட்பட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என கூறப்படுகிறது. இது குறித்து, அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



அதேபோல, இப்பகுதியிலுள்ள 30 அடி ஆழமான நீர்த் தேக்க ஓடை உள்ளதாகவும், இதனால் அவ்வழியே செல்லும் பள்ளிக் குழந்தைகள் முதல் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யக் கோரி மக்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...