கோவையில் அனைத்து பள்ளிகளிலும் போக்சோ குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்ட காவல்துறை முடிவு..!

அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர் அறை முன்பு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நோட்டீஸ் ஒட்ட ஏற்பாடு செய்து வருகின்றனர்.


கோவை: கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி உயிரிழந்த விவகாரத்தைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளிடம் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் நோட்டீஸ் ஒட்டப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை உக்கடத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் அந்த ஆசிரியர் குறித்து மாணவி பாலியல் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் எனவும், மாணவ, மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்து வந்தன.

இந்த நிலையில், அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர் அறை முன்பு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நோட்டீஸ் ஒட்டப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டுவதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

அதில் போக்சோ என்றால் என்ன? அந்தக் குற்றத்திற்குக் கிடைக்கும் தண்டனை, மாணவிகள் எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது குறித்த வாசகங்கள் இடம் பெற்றிருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...