கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் தற்போது பயணச்சீட்டு வழங்கும் மையம் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது
கோவை: கோவை கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கொண்டம்பட்டி சாலையில் ரயில் நிலையம் உள்ளது. மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்ததை அடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கிணத்துக்கடவு மார்க்கமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் தற்போது பயணச்சீட்டு வழங்கும் மையம் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால், பயணச்சீட்டு முன்பதிவு மையம் தொடங்கப்படாமல் இருப்பதால் ரயில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்குச் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய கோவை மற்றும் பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்குச் செல்லும் சூழ்நிலை இருப்பதால் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்கினால் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ரயில் பயணிகளுக்கு உபயோகமாக இருக்கும் என்றும், எனவே கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.