முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்திற்கு நியமனம்- ஆ.ராசா

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார் - திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா செயற்குழு கூட்டத்தில் தெரிவித்தார்.


கோவை: முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்காகச் செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார் - திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா செயற்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசுகையில்;



செந்தில் பாலாஜி கோவைக்கு வந்த பொழுது சிறிது தயக்கம் இருந்தது. அவர் வந்தவுடனேயே, அவருக்கு பொறுப்புகள் கொடுக்கப்பட்டது. அப்பொழுதுதான் அவரை உற்றுக் கவனித்தேன். அவர், தலைவரின் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் என்றும் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து செயல்படுகின்றார்.

கோவை மாவட்டம் ஏன் தோற்றது என்ற தகவல் எல்லாம் தலைவருக்கும் தெரியும் எனக் கூறிய அவர், திமுகவிற்கு எதிர்க் கருத்தை பரப்பும் நிலை எப்போதும் இருந்து வந்தது. இந்தியாவில் பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். இந்த முறை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை ஸ்டாலினுக்கு இருக்கின்றது.

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உளவியல் ரீதியாக பின்னடைவை அதிமுகவிற்கு ஏற்படுத்த வேண்டும். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவால் ஜெயிக்க முடியாது என்ற உளவியல் கருத்தை ஏற்படுத்த வேண்டும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...