கோவையில் பொதுக்கழிப்பிடத்தை பராமரிக்காத இளநிலை பொறியாளருக்கு 'மெமோ'.!!

கோவை மாநகராட்சியில், பொதுக்கழிப்பிடத்தைச் சரியாகப் பராமரிக்காத இளநிலை பொறியாளருக்கு 'மெமோ' வழங்க, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில், பொதுக்கழிப்பிடத்தைச் சரியாகப் பராமரிக்காத இளநிலை பொறியாளருக்கு 'மெமோ' வழங்க, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி, 10வது வார்டு, கருணாநிதி நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம் சரியாகப் பராமரிக்கப்படுகிறதா என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேற்று ஆய்வு செய்தார்.



அப்போது, அப்பகுதி பொதுமக்களிடம் அவர் பேசியபோது, 'தெருவிளக்கு எரிவதில்லை. கழிவுநீர் வெளியேறுவதில்லை. கழிப்பறை பயன்படுத்தத் தண்ணீர் இல்லை' என, பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினர்.

மோட்டார் பழுதாகி, தண்ணீரின்றி, பராமரிப்பு இல்லாமல் உள்ள பொதுக்கழிப்பிடத்தைப் பார்வையிட்ட கமிஷனர், பராமரிப்பு செலவுக்கு எப்படி பில் எழுதப்படுகிறது என கேள்வி கேட்டார். இப்பிரச்சினையில், இளநிலை பொறியாளர் ஹரிக்கு 'மெமோ' வழங்க உத்தரவிட்டார்.

பின், ராமசாமி வீதி, எம்.ஜி.ஆர்., மார்க்கெட் பின்புறம் மக்கும் குப்பையில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தைப் பார்வையிட்ட கமிஷனர், அதன் செயல்பாடுகளைக் கேட்டறிந்து, அறிவுரை வழங்கினார். அப்போது, உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் சண்முகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...