கடிதத்தில் இருப்பது மாணவியின் கையெழுத்து தானா? தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த காவல் துறையினர் முடிவு.

கோவையில் தற்கொலை செய்து கொண்ட 12 ஆம் வகுப்பு மாணவி எழுதிய கடிதத்தில் இருப்பது மாணவியின் கையெழுத்து தானா? என்பதை உறுதிபடுத்த, தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த இருப்பதாக, காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவையில் பாலியல் தொல்லையால், 12 ஆம் வகுப்பு படிக்கும் தன் மகள் தற்கொலை செய்து கொண்டார் என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்து வரும் காவல்துறையினர், முன்னதாக அந்த மாணவி படித்த முன்னாள் பள்ளியான, சின்மயா வித்தியலாயவில் ஆசிரியராக இருந்த மிதுன் சக்கரவர்த்தி, பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், அந்த மாணவியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ஒரு துண்டு சீட்டில் அந்த மாணவி மூவரின் பெயரை குறிப்பிட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தார். ஆரம்பத்தில் இருந்து குழப்பத்தை ஏற்படுத்தி வரும். இந்த கடிதம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. ஒரு புறம், அந்த கடிதத்தை அந்த மாணவி சில ஆண்டுகளுக்கு முன் எழுதியது என்றும் மறுபுறம் அது அந்த மாணவியின் கையெழுத்தே இல்லை என்று முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் கூறப்பட்டு வந்த நிலையில், மாணவியின் வீட்டில் கைப்பற்றபட்ட கடிதத்தை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அந்த கடிதத்தில் இருப்பது மாணவியின் கையெழுத்து தானா? என்பதை உறுதிபடுத்த இதை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும்,

மாணவி அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ள மற்ற நபர்கள் குறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் அனைத்து கோணங்களிலும் தீர விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...