கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் கூட்டம்.!

தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் கூட்டம் கோவையில், நடைபெற்றது. குறுந்தொழில் முனைவோர்களுக்கு எளிதாக மானியம் வழங்கிட உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது எனக் கூட்டமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் கூட்டம் 15.11.2021ல் R.S.புரத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:-

தொடரும் மூலப் பொருட்களின் விலையேற்றத்தால் முடக்கப்படும் குறு சிறு தொழில்கள். ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரம் பாதிப்புகள்.



லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம். மூலப்பொருட்கள் விலை ஏற்றம் தடுக்க நடவடிக்கை கோரி ஆண்டு ஒன்று ஆகியும் கண்டு கொள்ளாத ஒன்றிய அரசு 100% சதவீதம் விலை உயர்வு.

உற்பத்தித் துறை சார்ந்த தொழில் முனைவோர்கள் உற்பத்தி 50% சதவீதம் குறைப்பு. ஜாப்பாடர்கள் செய்து வரும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு ஆர்டர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒன்றிய அரசு விலை உயர்வு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முழுமையும் உள்ள தொழில் அமைப்புகளைக் கலந்து பேசி குறு சிறு தொழில்களைப் பாதுகாக்க மாநிலம் முழுமையும் குரல் கொடுக்க நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

தமிழக அரசு குறுந்தொழில் முனைவோர் நலன் கருதி தங்கள் வாங்கும் புதிய இயந்திரங்களுக்கு 25% சதவிகிதம் மானியம் வழங்கி வருகிறது தற்போது மானியம் பெற ISO சான்றிதழ் வேண்டும் என்ற புதிய நிர்ப்பந்தம் கொண்டு வந்து உள்ளது.

இந்த புதிய நிர்பந்தால் ஜாப்பாட்கள் செய்து வரும் குறுந்தொழில் முனைவோர்களும் உதிரிப்பாகங்கள் செய்து வரும் குறுந்தொழில் முனைவோர்களும் தங்கள் வாங்கும் இயந்திரங்களுக்கு மானியம் பெற ஆயிரகணக்கான பணம் செலவு செய்து ISO எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார்கள்.

இந்த நிலையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெற முடியாமல் கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்கள் தமிழக முதல்வரிடம் ISO பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும்.

குறுந்தொழில் முனைவோர்களுக்கு எளிதாக மானியம் வழங்கிட உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது எனக் கூட்டமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...