கோவையில் வட்டிக்கு பணம் வாங்கிய மகனை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் போலீசில் புகார்.!

கோவையில் வட்டிக்கு பணம் வாங்கிய மகனை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் போலீசில் புகார் கொடுத்தநிலையில், ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வட்டிக்கு பணம் வாங்கிய கோபிநாத்தைக் கடத்திச் சென்ற பிரகாஷ் சரவணனைதேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் வட்டிக்கு பணம் வாங்கிய மகனை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் போலீசில் புகார் கொடுத்தநிலையில், ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வட்டிக்கு பணம் வாங்கிய கோபிநாத்தைக் கடத்திச் சென்ற பிரகாஷ் சரவணனைதேடி வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி அருகே உள்ள சம்பத் வீதியைச் சேர்ந்தவர் சண்முகம் இவரது மனைவி சிவகாமி வயது 52, இவர் கோவை ரத்தினபுரி போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனது மகன் கோபிநாத் 30, தொழில் தேவைக்காகத் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த பிரகாஷ் 31, சரவணன் 24 ஆகியோரிடம் வட்டிக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.

இதில் ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தைத் திருப்பி செலுத்தி விட்டார். ஆனால் பிரகாஷ் சரவணன் ஆகியோர் எனது மகனிடம் ரூபாய் 2 லட்சத்திற்கு ஆன வட்டியை மட்டுமே செலுத்தி உள்ளீர்கள்.

கடனாகப் பெற்ற ரூபாய் 2 லட்சத்தைத் திருப்பி தரும்புறி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் மகன் இருந்தார் அப்போது அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து பிரகாஷ் சரவணன் ஆகியோர் எனது மகனை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுவிட்டனர்.

எனவே வட்டி கேட்டு கொடுமைப்படுத்தி எனது மகனை கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எடுத்து மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வட்டிக்கு பணம் வாங்கிய கோபிநாத்தைக் கடத்திச் சென்ற பிரகாஷ் சரவணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...