கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்.!

கோவை மாவட்டத்தில் 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 37,346 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்த கட்டமாக வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய 37 ஆயிரத்து 346 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன.

இதில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்கள் செய்ய 37 ஆயிரத்து 346 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் 5,212 பேர் வாக்காளர் பட்டிலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர்.

குறைந்தபட்சமாகக் கோவை தெற்கு தொகுதியில் 1,396 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் அந்த பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

அல்லது நீக்கல் மற்றும் திருத்தம் செய்யப்படும். கோவை மாவட்டத்தில் அடுத்த கட்டமாக வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...