கோவையில் மழையால் வீடு இடிந்து சேதம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்எல்ஏ., ஜெயராம் நிவாரண உதவி!

மழையால் சேதமடைந்த வீட்டிற்கு சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ., கே.ஆர். ஜெயராம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன் சொந்த நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கினார்.


கோவை: மழையால் வீடு இடிந்து சேதமான நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்எல்ஏ., ஜெயராம் நிவாரண உதவி வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புயல் காரணமாகத் தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதி பாடசாலை வீதியில் உள்ள ஜெகதாம்பாள் என்பவருக்குச் சொந்தமான வீடு நேற்று பெய்த மழையில் இடிந்து சேதமடைந்தது.



தகவலறிந்து நேரில் சென்ற சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ., கே.ஆர். ஜெயராம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் சொந்த நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கினார். கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...