கோவை மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் - கேக் வெட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தி அசத்தல்..!

வடவள்ளியில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொம்மனம் பாளையத்தில் குழந்தைகளுடன் மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் கேக் வெட்டி கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.


கோவை: கோவை அருகே உள்ள வடவள்ளியில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொம்மனம் பாளையத்தில் குழந்தைகளுடன் மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் கேக் வெட்டி கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.



குழந்தைகள் எந்த நிலையிலும் மிக தைரியமாக இருக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம் பேசினார்.

மாவட்ட போலீசார் சார்பில், குழந்தைகள் தின விழா, பொம்மணம்பாளையத்தில் உள்ள ஆஷ்ரயா பால் பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

குழந்தைகள் தின விழாவை, குழந்தைகள் கேக் வெட்டி கொண்டாடினர். குழந்தைகளுக்கு, எஸ்.பி., செல்வநாகரத்தினம் பரிசு பொருட்களை வழங்கினார்.



இதுகுறித்து எஸ்பி செல்வநாகரத்தினம் அவர்கள் பேசுகையில்,

குழந்தை செல்வங்களான நீங்கள், கல்வியை முறையாக கற்க வேண்டும். நீங்கள் எப்பொழுதும் மிக தைரியமாக இருக்க வேண்டும். உங்களை யாரேனும் அனுமதியின்றி தொட்டால், உடனடியாக ஆசிரியர்கள், போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்.

எப்போதும் உங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். எந்த நேரமும் போலீசாரை தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு பாதுகாப்பையும், உதவிகளையும் செய்வோம், என்றார்.

கூடுதல் எஸ்.பி., சுபாஷிணி, பேரூர் டி.எஸ்.பி., திருமால் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...